Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பொதுமக்கள்

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பொதுமக்கள்

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள ஒலேஷ்கி நகரிலிருந்து மீட்கப்பட்ட மக்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர்

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலேஷ்கி நகரில் உணவின்றி பட்டினியாலும், கடும் சோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள், மீட்பு நடவடிக்கையின் மூலம் உக்ரைன் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரில், பொதுமக்களை வெளியேற்றுவதற்காக இத்தகைய மனிதாபிமான போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகள் மற்றும் போப் பதினான்காம் லியோவின் உதவியுடன், ஒலேஷ்கி நகரில் 6 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, குறிப்பிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட போர் நிறுத்தமாக இது கருதப்படுகிறது.
இந்த தற்காலிக போர் நிறுத்தம், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.
“ஒலேஷ்கி நகரைச் சேர்ந்த உக்ரைன் மக்கள், செர்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் எல்லையைக் கடந்து பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்க அரசுக்கும், அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்புக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “போர் பதற்றத்தைத் தணிப்பதற்கும், உண்மையான அமைதியை நோக்கி முன்னேறுவதற்கும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் நீலம் மற்றும் மஞ்சள் நிறக் கொடிகளைத் தங்கள் உடலில் போர்த்தியபடி, மீட்கப்பட்ட பொதுமக்கள் உக்ரைன் - பெலாரஸ் எல்லைப் பகுதியில் பேருந்துகளில் இருந்து இறங்கினர். அங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தினரைச் சந்தித்த அவர்கள், உணர்ச்சிப்பூர்வமாகக் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மீட்கப்பட்ட மக்களை வரவேற்க உக்ரைன் அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நெடுஞ்சாலையின் இருபுறமும் திரண்டு, உக்ரைன் தேசியக் கொடிகளையும் ஒளிவிளக்குகளையும் அசைத்து, மீட்கப்பட்ட மக்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மீட்கப்பட்டவர்களில் சக்கர நாற்காலியில் வந்த முதியவர் ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தனது துயர அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். கடந்த ஓராண்டில் மட்டும் தனது உடல் எடை 20 கிலோ குறைந்துவிட்டதாகவும், போதிய உணவு கிடைக்காததால் உடல் மிகவும் பலவீனமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். “உயிர் பிழைப்பதற்காகப் புற்களையும், பூசணிக்காய்களையும் நறுக்கிச் சாப்பிட்டு வந்தோம்” என்று மீட்கப்பட்ட பெண் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ரேவன்சா டெவலப்பர்ஸ் அம்பாசிடரானார் ரவி மோகன்
அடுத்த செய்தி
புதிய ஷீட் மாஸ்க் அறிமுகப்படுத்திய ராகா புரொஃபஷனல்

தொடர்புடைய செய்திகள்