Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

திருத்தப்பட்ட 2015 போனஸ் சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும்

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் குரூப் 3, 4 தொழிலாளர்களுக்கு இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், மின் உற்பத்திக் கழகம், பசுமை எரிசக்தி கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய 4 கழகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பொருந்தும் வகையில் போனஸ் உத்தரவை மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட 2015 போனஸ் சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும். ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.7,000-க்கு மேல் இருந்தாலும், போனஸுக்கான அதிகபட்ச கணக்கீட்டு வரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதிகபட்ச போனஸாக ரூ.6,997 மற்றும் கருணைத் தொகையாக ரூ.9,803 என மொத்தம் ரூ.16,800 வரை தொழிலாளர்களுக்குக் கிடைக்கும்.

முழு ஆண்டும் வேலை செய்யாதவர்களுக்கு, அவர்கள் வேலை செய்த நாட்களின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் கணக்கிட்டு வழங்கப்படும். மாதச் சம்பளம் பெறும் முழுநேரப் பணியாளர்கள், கள உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் கணக்கீட்டாளர்கள் கேங்மேன் மற்றும் காலமுறை ஊதியத்தில் உள்ள பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். மாத ஊதியம் ரூ.21,000-க்கு மேல் பெறுபவர்களுக்கும் இது பொருந்தும்.

மேலும், 2025-2026 நிதியாண்டில் குறைந்தபட்சம் 30 நாட்கள் பணியாற்றியிருக்க வேண்டும். தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்கள், அயற்பணியில் வந்தவர்கள், குறிப்பிட்ட நிதியாண்டில் பதவி உயர்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கும் பணிக்காலத்தின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணுப் பரிமாற்ற முறையால் வரும் நவம்பர் 4-ம் தேதி அனைத்துத் தகுதியான தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் பணம் செலுத்தப்படவுள்ளது.
முந்தைய செய்தி
ரூ.3000-ஐ தாண்டியது வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்
அடுத்த செய்தி
Flower prices surge after spike in orders

தொடர்புடைய செய்திகள்