Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அம்மா மருந்தகங்களை முழுமையாக திறக்க இபிஎஸ் வலியுறுத்தல்

அம்மா மருந்தகங்களை முழுமையாக திறக்க இபிஎஸ் வலியுறுத்தல்

'அம்மா மருந்தகங்களை' அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

பகிரவும் WhatsApp Facebook

அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து ஏழை மக்களின் உயிர் காக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழை, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2014-ம் ஆண்டு கூட்டுறவுத் துறை மூலம் 'அம்மா மருந்தகங்களை' அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 


எனது தலைமையிலான ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன.
திமுக ஆட்சியில் 'முதல்வர் மருந்தகம்' என பெயர் மாற்றப்பட்டு, தனியாருக்கு வழங்கி, அம்மா மருந்தகங்களின் செயல்பாடு முடக்கப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு இம்மருந்தகங்களை கண்டுகொள்ளவே இல்லை.


சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களின் உயிர் காக்கும் மருந்துகளின் விலையில், நிர்ணயிக்கப்பட்ட 30 சதவீத லாப வரம்பையும் தாண்டி விலை நிர்ணயம் செய்து விற்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 
எனவே ஏழை மக்களின் நோய்ப் பிணியைத் தீர்க்க, ஜெயலலிதாவின் அரசால் கொண்டுவரப்பட்ட அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து, மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


முந்தைய செய்தி
அன்பில் மகேஸுக்கு 3 நாள் போலீஸ் காவல்
அடுத்த செய்தி
வன உயிரின வாரிய உறுப்பினர்கள் நியமனம்

தொடர்புடைய செய்திகள்