Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆந்திராவை நோக்கி நகரும் ‘முரசு’ புயல்

ஆந்திராவை நோக்கி நகரும் ‘முரசு’ புயல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான இந்தப் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அது ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அங்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


ஏற்கெனவே ‘அர்னாப்’ புயலின் தாக்கத்தைச் சந்தித்த ஆந்திர மாநிலத்துக்கு தற்போது ‘முரசு’ புயல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான இந்தப் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் நேற்று மையம் கொண்டிருந்த இந்தப் புயல், தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இது இன்று தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர்ந்து, நாளை காலை நெல்லூர்-நரசாபுரம் இடையே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வங்கக்கடலில் கடல் சீற்றம் அதிகரித்து, கடல் நிலை மிகவும் மோசமடையக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முந்தைய செய்தி
அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி
அடுத்த செய்தி
பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளை அடைய 200 நாடுகள் உறுதி

தொடர்புடைய செய்திகள்