Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தேர்தலுக்குப் பின்னர் திரைமறைவு பேச்சுவார்த்தை - வைகோ

தேர்தலுக்குப் பின்னர் திரைமறைவு பேச்சுவார்த்தை - வைகோ

அதிமுக ஆட்சி அமைய திமுக ஆதரவு அளிப்பது தொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தை நடந்தது.

பகிரவும் WhatsApp Facebook

தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய திமுக ஆதரவு அளிப்பது தொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தை நடந்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 30 ஆண்டுகள் தொடர்ந்து போராடினேன். இதனால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஆணை வெளியிடப்பட்டது. தற்போது பசுமை தாமிரம் என்ற பெயரில் வேறு வடிவில் ஆலையை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.


ஆனால், அந்த நிறுவனத்தினரை சந்திக்க முதல்வர் விஜய் இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி வழங்கவில்லை. முதல்வர் நேர்மையாக ஆட்சி நடத்துகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய திமுக ஆதரவு அளிப்பது தொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தை நடந்தது. எஸ்ஐஆர் சீர்திருத்தம் காரணமாகவே தவெக ஆட்சி வந்ததாக சிலர் கூறுகின்றனர். எஸ்ஐஆர் நடவடிக்கையால் தமிழகத்தில் 97 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 

இதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும். எஸ்ஐஆர் பணிகளை திமுக கையாளாகாமல் இருந்திருந்தால், தவெக 30, 40 தொகுதிகள் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம் - டிடிவி.தினகரன்
அடுத்த செய்தி
How account aggregator is speeding up instant business loans

தொடர்புடைய செய்திகள்