Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம் - டிடிவி.தினகரன்

திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம் - டிடிவி.தினகரன்

திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம்.

பகிரவும் WhatsApp Facebook

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, வெறும் சினிமா மாயையை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். நிழலில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்தில் வில்லனாக உருமாறி வருகிறார். அரிசி, பருப்பு, உப்பு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சமூக விரோதச் செயல்களில் தவெகவினர் ஈடுபடுகின்றனர். இந்த ஆட்சி விரைவில் வீழும்.


தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை இருந்தது. தவெகவால் ஆட்சியமைக்க முடியாத பட்சத்தில், பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது உண்மைதான். அதற்கு தவெகவிடம் ஆதரவு கேட்கவே முடிவு செய்தோம். திமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை.


இந்த ஆதரவு கிடைக்காத நிலையில், திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம். மற்றபடி, திமுக - அதிமுக எப்படி ஒன்றாக சேர்ந்து ஆட்சியமைக்க முடியும்? அதிமுக - திமுக எந்தக் காலத்திலும் கூட்டு சேரவே முடியாது
அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களுக்கு ஆசைகாட்டி வாக்குகளை பெற்று ஆட்சியமைத்ததை மறைப்பதற்காகவே அதிமுக - திமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக கூறினார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


முந்தைய செய்தி
Elon Musk spends over $442 million on Republican campaigns
அடுத்த செய்தி
தேர்தலுக்குப் பின்னர் திரைமறைவு பேச்சுவார்த்தை - வைகோ

தொடர்புடைய செய்திகள்