Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காக குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மண் சரிவுகள் ஏற்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின்றி கொடைக்கானல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு வனத் துறை கட்டுபாட்டில் உள்ள பில்லர் ராக், குணா குகை, பைன் மர சோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும், நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொண்டும், ஏரியைச் சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் மகிழ்ந்து வருகின்றனர். 

அதேநேரத்தில், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் நகர் பகுதியில் குறைந்து சுற்றுலா தளங்களில் மட்டும் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


முந்தைய செய்தி
Free vaccination drive for stray dogs
அடுத்த செய்தி
Don't travel by air, says SC

தொடர்புடைய செய்திகள்