Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குட்கா வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குட்கா வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வழக்கு விசாரணை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பகிரவும் WhatsApp Facebook

மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

2018-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருக்கும் குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஜூலை 4-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கை முடிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம் கோரி சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் இந்த வழக்கில் 250 சாட்சிகளுக்கு மேல் விசாரிக்க உள்ளதாகவும், 498 ஆவணங்கள் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏராளமான சாட்சிகள் விசாரிக்க வேண்டிய நிலையில் , எப்படி மூன்று மாதங்களில் வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து முடிக்க உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


முந்தைய செய்தி
மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும்: காதர் மொகிதீன்
அடுத்த செய்தி
ஜிசிசி மையங்களை ஈர்ப்பதில் பெங்களூருவை முந்தும் சென்னை

தொடர்புடைய செய்திகள்