Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும்: காதர் மொகிதீன்

மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும்: காதர் மொகிதீன்

மத்திய அரசின் நடவடிக்கைகளை தேவைக்கேற்ப பாராட்டவும் எதிர்க்கவும் தமிழக அரசு தயாராக இருப்பதாக கூறினார்

பகிரவும் WhatsApp Facebook

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இணையதள நண்பர்கள் சந்திப்பு வரும் 14-ம் தேதி சமயபுரத்தில் நடைபெறுவதையொட்டி, இணையதள சந்திப்பு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைந்தது இதுவே முதல் முறையாகும். குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் பல்வேறு தரப்பினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்து, ஆட்சியில் பங்கேற்றுள்ளோம். போதைப் பொருள் கலாசாரத்தை ஒடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முந்தைய செய்தி
நிதி திரட்டும் நடைமுறைகளை எளிமையாக்க செபி திட்டம்
அடுத்த செய்தி
குட்கா வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தொடர்புடைய செய்திகள்