Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது: அமைச்சர் அருண்ராஜ்

செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது: அமைச்சர் அருண்ராஜ்

முதல்வர் வருகையின்போது அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்துடன் பெட் ஸ்கேன் மையமும் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி / சென்னை

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 4,724 செவிலியர் பணியிடங்களும் மாவட்ட நலச்சங்கங்கள் மூலம் வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.


திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருச்சி மருத்துவமனை கட்டடப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முதல்வர் வருகையின்போது அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்துடன் பெட் ஸ்கேன் மையமும் திறக்க ஏற்பாடு செய்யப்படும். திருச்சி மாவட்டத்துக்கு மருத்துவத்துறை சார்பில் ரூ.102.05 கோடியில் 104 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், உயர் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க 284 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமன அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறாதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 4,724 செவிலியர் பணியிடங்களும் மாவட்ட நலச்சங்கங்கள் மூலம் வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது என்றார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அருண்ராஜ் கூறும்போது, "தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் உள்ளது. கொசு ஒழிப்பு, கொசு உற்பத்தியாகும் புழுக்கள் ஒழிப்புக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடு வீடாகச் சென்று கொசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் மருந்து–மாத்திரை வாங்க நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதை சரி செய்ய நலம் ஏ.ஐ. என்ற வாட்ஸ்அப் செயலியை வடிவமைத்துள்ளோம். அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், மருந்து மாத்திரை வாங்குபவர்கள் முன்பதிவு செய்து, காத்திருக்காமல் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.

முந்தைய செய்தி
Indian travellers seek cultural, adventure and spiritual holidays
அடுத்த செய்தி
ரூ.3000-ஐ தாண்டியது வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்

தொடர்புடைய செய்திகள்