Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி

கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி

கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள உரிமை.

பகிரவும் WhatsApp Facebook

வரும் ஜன.21ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்த உள்ளோம் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள உரிமை. தமிழகத்தில் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
கள் தடை நியாயமானதே என நிரூபிக்கும் எம்.பி.க்கு பென்ஸ் காரும், எம்எல்ஏவுக்கு இன்னோவா காரும் பரிசாக வழங்குவோம்.


தமிழக முதல்வர் விஜய், தான் கள் எதிர்ப்பாளர் என்பதை மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் பதிவு செய்துள்ளார். கள்ளில் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை ஆந்திர முதல்வரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.


பெரியார் கள் ஆதரவாளராக இருந்தார். பெரியார் படத்தை, பெயரை உயர்த்தி பிடிக்கும் வைகோ, திருமாவளவன், கி.வீரமணி ஆகியோர், கள் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். வரும் ஜன.21-ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி, சந்தைப்படுத்தப்படும். அரசியலமைப்பு சட்டத்தை முன்னிறுத்தி கள் இறக்குவோம்.


மது விலக்கு சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்தால், மது விலக்கு சட்டத்துக்கு, அரசியலமைப்பு சட்டம் கட்டுப்பட்டதா என்று கேள்வி எழுப்புவோம்.
தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பாயும் பாண்டியாறு–மாயாறு இணைப்புத் திட்டத்தை ரூ.1,500 கோடியில் செயல்படுத்தினால், தமிழகத்துக்கு தண்ணீரும், கேரளாவுக்கு மின்சாரமும் கிடைக்கும். இந்த திட்டம் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு முன்னோடியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
லாக்டோஸ் இல்லாத உயர் புரதப் பால் "Milky Mist" அறிமுகம்
அடுத்த செய்தி
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குடியரசு துணைத் தலைவர் மரியாதை

தொடர்புடைய செய்திகள்