Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கள் தடையை நியாயப்படுத்தினால் ரூ.10 கோடி பரிசு

கள் தடையை நியாயப்படுத்தினால் ரூ.10 கோடி பரிசு

தமிழகத்திலும் கலப்படத்தைக் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?

பகிரவும் WhatsApp Facebook

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போடிநாயக்கன்பட்டியில் மரவள்ளிக்கிழங்கு பயிர் தொடர்பான விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் கள்ளுக்கு தடை இல்லை. கலப்படம் செய்யப்படுவதாகக் கூறி கள்ளுக்கு தடை விதிப்பதன் மூலம் விவசாயிகளின் உரிமையை அரசு பறித்து வருகிறது. கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லாத நிலையில், அங்கு கலப்படத்தை முறையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 
தமிழகத்திலும் கலப்படத்தைக் கட்டுப்படுத்த முடியாதது ஏன்? கள்ளுக்கான தடையை நியாயமானது என தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களில் யாராவது ஒருவர் நேரில் வந்து நிரூபித்தால், தமிழக கள் இயக்கம் சார்பில் அவருக்கு பென்ஸ் கார் பரிசாக வழங்கப்படும். இதேபோல், எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் தடையை நியாயப்படுத்தினால், அவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்.


மேலும், தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களில் யாராவது ஒருவர் கள்ளுக்கான தடை நியாயமானது என்பதை நிரூபித்தால், அவருக்கு ரூ.10 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
நோபலும் இல்லை; புலிட்சரும் கிடைக்கலை - ட்ரம்ப் வேதனை
அடுத்த செய்தி
ரூ.1.26 லட்சத்திற்கு சின்ன வெங்காயம் ஏலம்

தொடர்புடைய செய்திகள்