Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நோபலும் இல்லை; புலிட்சரும் கிடைக்கலை - ட்ரம்ப் வேதனை

நோபலும் இல்லை; புலிட்சரும் கிடைக்கலை - ட்ரம்ப் வேதனை

ரஷ்யா குறித்த விசாரணையை செய்​தி​யாக வெளி​யிட்ட பத்திரிகையாளர்களுக்கு புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்​டது.

பகிரவும் WhatsApp Facebook

உல​கின் உயர்ந்த விருதான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்​டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரு​கிறார். ஆனால், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு தென் ஆப்​பி​ரிக்க சட்ட நிபுணரும், தமிழ் வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான நவநீதம் பிள்​ளைக்கு அறிவிக்​கப்​பட்​டது. இத​னால் அதிருப்தி அடைந்த ட்​ரம்ப் "நவநீதம் பிள்​ளையை யாருக்​கும் தெரியாது" என்று விமர்சித்தார்.

இந்​நிலை​யில், தென் கரோலினா மாகாணத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய ட்​ரம்ப், “ரஷ்யா குறித்த விசாரணையை செய்​தி​யாக வெளி​யிட்ட பத்திரிகையாளர்களுக்கு புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்​டது. அவர்​களது செய்தி அறிக்​கைகள் தவறானவை. 


உண்மையில், எனது எழுத்​துக்​காக எனக்கு புலிட்​சர் பரிசு கிடைத்​திருக்க வேண்டும். எனக்கு நோபல் அமைதி பரிசும் கிடைக்​க​வில்லை. புலிட்​சர் பரிசும் வழங்​கப்​பட​வில்லை.

 எனினும், அதுகுறித்து எனக்கு கவலை இல்லை” என்று கூறினார். புலிட்​சர் பரிசு என்​பது பத்​தி​ரிகை, இலக்​கியம், நாடகம் மற்​றும் இசைத் துறைகளில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு அமெரிக்கா​வில் வழங்​கப்​படும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
5 ஆண்டுகளில் 3 கோடி டன் மீன் உற்பத்திக்கு இலக்கு
அடுத்த செய்தி
கள் தடையை நியாயப்படுத்தினால் ரூ.10 கோடி பரிசு

தொடர்புடைய செய்திகள்