Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குரூப் 4 தேர்வு அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்

குரூப் 4 தேர்வு அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

அதிகப்படியான காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்போர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 46 வகையிலான பணிகளுக்கு 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தேர்வர்கள் இத்தேர்வை எதிர்கொள்ளத் தயாராக உள்ள நிலையில், வெறும் 6,574 காலிப் பணியிடங்களை மட்டும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுத் துறைகளில் நிலவும் அனைத்து காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக அரசின் இந்த அறிவிப்பு, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப் பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய செய்தி
கட்சிகளுக்கு ’அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்த வாக்காளர்கள்
அடுத்த செய்தி
சிறைக் கைதிகளிடம் வரவேற்பு பெறும் ‘செஸ்’

தொடர்புடைய செய்திகள்