Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிரேசிலில் பரவும் காட்டுத் தீ! அதிகரிக்கும் காற்று மாசு

பிரேசிலில் பரவும் காட்டுத் தீ! அதிகரிக்கும் காற்று மாசு
பிரேசிலின் அமேசானாஸ் மாநிலம், அவுடாசெஸ் நகராட்சியில் காட்டுத்தீயால் சூழ்ந்த புகை மண்டலத்தின் இடையே பறக்கும் பறவைகள். படம்: ஏபி/பிடிஐ

வறண்ட வானிலை மற்றும் எல் நினோ காலநிலை நிகழ்வின் தாக்கம் காட்டுத்தீயைத் தீவிரப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் பரவும் காட்டுத்தீயால், மானஸ் நகரில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

அமேசான் வனப்பகுதியில் பல இடங்களில் பரவும் தீயிலிருந்து வெளியேறும் புகை நகரைச் சூழ்ந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரித்ததால், நகராட்சி அலுவலகங்களின் நேரடி பணிகள் நிறுத்தப்பட்டன. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


காற்று மாசு காரணமாக முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வறண்ட வானிலை மற்றும் எல் நினோ காலநிலை நிகழ்வின் தாக்கம் காட்டுத்தீயைத் தீவிரப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்த அரசு கூடுதல் தீயணைப்புப் படையினரையும் விமானங்களையும் பயன்படுத்தி வருகிறது. காட்டுத்தீ வனவிலங்குகளுக்கும், வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.





முந்தைய செய்தி
India aims to cut critical tech dependencies - Ashwini Vaishnaw
அடுத்த செய்தி
செம்பு விலை உயர்வு - மின்சாதனப் பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்