Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரிநியூ நிறுவனத்திற்கு ரூ.955 கோடி நிதி

ரிநியூ நிறுவனத்திற்கு ரூ.955 கோடி நிதி

நீண்டகால நிலையான மூலதனத்தைப் பெறவும், நிதி ஆதாரங்களை விரிவுபடுத்தவும் இது உதவும் என ரிநியூ தலைமை நிதி அதிகாரி தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ரிநியூ, நெதர்லாந்தின் வளர்ச்சி வங்கியான எஃப்எம்ஓவிடமிருந்து சுமார் ரூ.955 கோடி நிதி வசதியைப் பெற்றுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ரிநியூ சோலார் பவர் நிறுவனத்திற்கு வழங்கப்படும் இந்தப் பத்தாண்டு நிதி, குழுமத்தின் கட்டுமானத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.


இந்திய எரிசக்தித் துறையில் எஃப்எம்ஓ மேற்கொண்ட மிகப்பெரிய தனி முதலீடு இதுவாகும். நீண்டகால நிலையான மூலதனத்தைப் பெறவும், நிதி ஆதாரங்களை விரிவுபடுத்தவும் இந்த வசதி உதவும் என ரிநியூ தலைமை நிதி அதிகாரி கைலாஷ் வாஸ்வானி தெரிவித்தார்.

நிறுவனத்தின் தூய எரிசக்தித் திட்டத் தொகுப்பு 20.5 ஜிகாவாட்டாக உள்ளது. மேலும், சூரிய மின்கல உற்பத்தித் திறனை நான்கு ஜிகாவாட் அதிகரிக்கும் விரிவாக்கம் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
ரூபாய் மதிப்பை சந்தையே தீர்மானிக்கட்டும் - உதய் கோட்டக்
அடுத்த செய்தி
இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு 7%-ஆக உயர்வு

தொடர்புடைய செய்திகள்