Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஈரான் மீன்பிடிக் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

ஈரான் மீன்பிடிக் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் அட்லாண்டா கடற்படை நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சோமாலிய கடற்கொள்ளையர்கள், 23 பேருடன் சென்ற ஈரான் மீன்பிடிக் கப்பலைக் கடத்தியுள்ளனர். வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான மிதக்கும் தளமாக அதைப் பயன்படுத்தக்கூடும் என ஐரோப்பிய ஒன்றிய கடல்சார் பாதுகாப்பு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு சோமாலியாவின் பந்தர் பெய்லா, ஹஃபுன் கடலோர நகரங்களுக்கு இடையே வியாழக்கிழமை ‘அசினி’ கப்பல் கடத்தப்பட்டது. இதில் 21 ஈரானியப் பணியாளர்களும் இரண்டு சோமாலிய பாதுகாவலர்களும் இருந்தனர். பன்னிரண்டு கொள்ளையர்கள் கப்பலைக் கைப்பற்றியதாக பன்ட்லாந்து கடல்சார் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

கப்பலில் உள்ளவர்களின் பாதுகாப்பு நிலை தெரியவில்லை. வணிகக் கப்பல் பாதையை நோக்கி அது நகர்வதால், அப்பகுதியில் செல்லும் கப்பல்கள் விழிப்புடன் இருக்கவும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளைத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அட்லாண்டா கடற்படை நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஆறு வணிகக் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் பாதுகாப்புக் கவலைகளை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஈரான் போரால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியக் கப்பல் போக்குவரத்துக்கு, மீண்டும் அதிகரிக்கும் சோமாலிய கடற்கொள்ளை மேலும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
ஐ.நா. பணி நீட்டிப்பு தீர்மானம் தோல்வி - அமெரிக்கா, ரஷ்யா இடையே மோதல்!
அடுத்த செய்தி
ED registers money laundering case against Subhash Chandra

தொடர்புடைய செய்திகள்