Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பால் 3,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பல்

பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பால்  3,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் வெடித்து சாம்பல் புகை வெளிப்பட்ட மயோன் எரிமலை.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாம்பல் படியக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மயோன் எரிமலை வெடித்ததில், சுமார் 3,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறியது. இதையடுத்து, எரிமலை அமைந்துள்ள பகுதியில் எச்சரிக்கை நிலை 2-ல் இருந்து 3-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எரிமலையைச் சுற்றியுள்ள 6 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை, அந்நாட்டின் மிகவும் தீவிரமாகச் செயல்படும் எரிமலைகளில் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை (அக். 30) காலை 11.53 மணியளவில் திடீரென வெடித்தது. சுமார் 6 நிமிடங்கள் நீடித்த இந்த வெடிப்பின்போது, எரிமலையின் உச்சியில் இருந்து அடர்த்தியான சாம்பல் புகை 3,000 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது.

இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாம்பல் படியக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தராகா, கினோபதான், கமாலிக் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சில நாள்கள் அல்லது வாரங்களில் எரிமலையில் இருந்து உருகிய பாறைக் குழம்பு வெளியேறவும், அதிக வெப்பத்துடன் சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள் சரிவுகளில் வேகமாகப் பரவவும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எரிமலையைச் சுற்றியுள்ள ஆபத்துப் பகுதியில் மக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிமலைக்கு அருகே விமானங்களை இயக்க வேண்டாம் என்றும் விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெடிப்பைத் தொடர்ந்து உடனடியாக உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


முந்தைய செய்தி
Oil dependence to sustain trade deficit; petroleum exports offer relief
அடுத்த செய்தி
Ministry sets up panel to boost RELIEF scheme for exporters

தொடர்புடைய செய்திகள்