Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சீன உற்பத்தித் துறையில் கடும் சரிவு

சீன உற்பத்தித் துறையில் கடும் சரிவு

ஆர்டர்கள் குறைந்ததால், உற்பத்தித் துறை மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில், தொழிற்சாலைகளின் உற்பத்திச் செயல்பாடு அக்டோபர் மாதத்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறைந்ததால், உற்பத்தித் துறை மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

சீனாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான உற்பத்தித் துறை கொள்முதல் மேலாண்மை குறியீடு (பிஎம்ஐ) 49.3 ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது 50.1 ஆக இருந்தது. பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த 50 புள்ளிகளையும் இந்தக் குறியீடு எட்டவில்லை.


பிஎம்ஐ குறியீட்டில் 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறை வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவும், 50 புள்ளிகளுக்குக் கீழ் இருந்தால் சரிவில் இருப்பதாகவும் பொருள்.
இந்தக் குறியீடு தொழிற்சாலைகளின் உற்பத்தி, புதிய ஆர்டர்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.


அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் நிலவும் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்திருப்பது உற்பத்தியாளர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.


மூன்றாவது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 4.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், தொழிற்சாலை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு கவலையை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டுத் தேவை அதிகரிக்காததும், உற்பத்தித் துறையில் நிலவும் சவால்களும் சீனப் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி
அமெரிக்க தொலைபேசி எண்கள்: சீன நிறுவனங்கள் பயன்படுத்த தடை
அடுத்த செய்தி
கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி!

தொடர்புடைய செய்திகள்