Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடல் கண்ணிவெடியில் சிக்கி 4 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடிப்பு

கடல் கண்ணிவெடியில் சிக்கி 4 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்த பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற கப்பலில் இருந்த 25 ஊழியர்களை ஓமன் மீட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளில் சிக்கி 4 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்ததாக ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இதில் 20 லட்சம் பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற பிரம்மாண்ட கப்பலும் சிக்கியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரானின் அனுமதியின்றி, தடை செய்யப்பட்ட வழித்தடத்தில் சென்றதால் இந்தக் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, 3 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி தீப்பிடித்ததாக ஈரான் கடற்படை கூறியிருந்தது. அந்தக் கப்பல்கள் தங்களது வழிகாட்டி மற்றும் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவிகளை அணைத்துவிட்டு பயணித்ததாகவும், வானொலி மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்த பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற கப்பலில் இருந்த 25 ஊழியர்களை ஓமன் மீட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஈரான் குறிப்பிட்ட கப்பல் தீ விபத்துகளுடன் தொடர்புடையதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், ஈரான் கடற்கரைக்கு அருகே லாவன் தீவின் தெற்குப் பகுதியில் சென்ற கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணைப் பொருள் தாக்கியதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் கப்பல் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஏமனின் ஏடன் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கத்தார் மத்தியஸ்தக் குழுவினரும் மீண்டும் டெஹ்ரான் சென்றுள்ளனர். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது சர்வதேச எண்ணெய் சந்தையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
தீபாவளி பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டம்!
அடுத்த செய்தி
ஆம்பூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

தொடர்புடைய செய்திகள்