Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சூடான் ட்ரோன் தாக்குதல்கள் - ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

சூடான் ட்ரோன் தாக்குதல்கள் - ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சூடானில் அதிகரித்துவரும் ட்ரோன் தாக்குதல்களையும், அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பேரழிவையும் ஐ.நா. பொது ச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

சூடான் மற்றும் அப்யேய் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.


பொதுமக்களையும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டமைப்புகளையும் குறிவைக்கும் தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் பொதுமக்களைப் பாதுகாத்து, உடனடியாகப் போர் நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என குத்தேரஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியஸ்த முயற்சிகளில் நல்லெண்ணத்துடன் பங்கேற்கவும் அவர் அழைப்பு விடுத்தார். 

சூடான் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் நிலையான அரசியல் தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்க ஐ.நா. தயாராக இருப்பதாகவும், பேரழிவை ஏற்படுத்திவரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல்படியாகப் பகைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
ED registers money laundering case against Subhash Chandra
அடுத்த செய்தி
OpenAI seeks Samsung, SK amid chip shortage

தொடர்புடைய செய்திகள்