Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரசியலில் அந்தஸ்தை உயர்த்தும் காசியோ கடிகாரம் - பின்னணி என்ன?

அரசியலில் அந்தஸ்தை உயர்த்தும் காசியோ கடிகாரம் - பின்னணி என்ன?

காசியோ டிஜிட்டல் கடிகாரம் புதிய அரசியல் அந்தஸ்தின் அடையாளமாக உருவெடுத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தாய்லாந்தில் விலை உயர்ந்த ஆடம்பரக் கடிகாரங்கள் அரசியல் செல்வாக்கின் அடையாளமாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க டாலரில் 60 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,700) விலையுள்ள காசியோ டிஜிட்டல் கடிகாரம் புதிய அரசியல் அந்தஸ்தின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. 

அந்நாட்டுப் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தனது பெயரைப் பொறித்து அமைச்சர்கள் மற்றும் அரசியல் கூட்டாளிகளுக்கு இந்தக் கடிகாரத்தைப் பரிசளிப்பதே இதற்குக் காரணம்.

காசியோ நிறுவனத்தின் ஏஇ-1200 டபிள்யூஹெச் மாடல் கடிகாரம், அதன் வடிவமைப்பு காரணமாக ‘காசியோ ராயல்’ என்று அழைக்கப்படுகிறது. உலக வரைபடத்தைக் காட்டும் திரையைக் கொண்ட இந்தக் கடிகாரத்தைப் பிரதமர் அனுதின், பாங்காக் நகரின் சிறிய கடைகளிலும், சந்தைகளிலும் வாங்குகிறார். பின்னர் தனது பெயரைப் பின்புறத்தில் பொறித்து, தனக்கு நெருக்கமானவர்களுக்குப் பரிசாக வழங்குகிறார்.


துணைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிரிபோங் அங்கசகுல்கியாட் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்தக் கடிகாரத்தை அணிந்துள்ளனர். அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள், அரசியல் கூட்டாளிகள் மத்தியில் இது பிரபலமடைந்துள்ளதால், இந்தக் குழுவினர் ‘காசியோ தொடர்பு வட்டம்’ என்று குறிப்பிடப்படுகின்றனர்.

முந்தைய செய்தி
விரைவில் டெண்டர்: வேலூரில் 10 கல் குவாரிகள்! வெளியான தகவல்
அடுத்த செய்தி
eternal Limited - SBI கார்டு இணைந்து புதிய கிரெடிட் கார்டு

தொடர்புடைய செய்திகள்