Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நிதி திரட்டும் நடைமுறைகளை எளிமையாக்க செபி திட்டம்

நிதி திரட்டும் நடைமுறைகளை எளிமையாக்க செபி திட்டம்

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 17 சதவீதமும், பரஸ்பர நிதி சொத்து மதிப்பு 20 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன

பகிரவும் WhatsApp Facebook

இந்திய மூலதனச் சந்தையில் நிறுவனங்கள் எளிதாக நிதி திரட்டுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்தார்.

கொல்கத்தாவில் நடந்த பாரத் வர்த்தக சபையின் 125-வது ஆண்டு விழாவில் நேற்று பங்கேற்ற அவர் பேசியதாவது:

இந்திய மூலதனச் சந்தையை உலகத் தரத்துக்கு உயர்த்த பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனங்கள் பங்குகளை வெளியிடுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. உரிமைப் பங்கு வெளியீட்டுக்கான கால அவகாசமும் குறைக்கப்பட்டுள்ளது.

கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கான விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் நிறுவனங்களின் நிதி திரட்டும் செலவுகள் குறையும். அதேநேரத்தில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 17 சதவீதமும், பரஸ்பர நிதி சொத்து மதிப்பு 20 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.
2018-19 நிதியாண்டிலிருந்து பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து, 15 கோடியைத் தாண்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 189 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.98,000 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன. நிறுவனக் கடன் பத்திரங்களின் நிலுவை மதிப்பு ரூ.61 லட்சம் கோடியாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் 36 சதவீதத்தினர் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வருவதால் இணையப் பாதுகாப்பு, சந்தைக் கண்காணிப்பு, இடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சந்தையில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும்போதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் வலுவான கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். 

விதிமுறைகளை எளிமைப்படுத்தும் அதேநேரத்தில் நிறுவனங்களின் நிர்வாகத் தரம் மற்றும் சந்தையின் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் சரிவு
அடுத்த செய்தி
மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும்: காதர் மொகிதீன்

தொடர்புடைய செய்திகள்