Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கிரெடிட் கார்டு பயன்பாடு 6 சதவீதம் சரிவு

கிரெடிட் கார்டு பயன்பாடு 6 சதவீதம் சரிவு

வங்கிகளை பொறுத்தவரை, ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள், கடந்த செப்டம்பரில் 6 சதவீதம் சரிந்து, ரூ.2.04 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த 2021 பிப்ரவரிக்குப் பிறகு கிரெடிட் கார்டு செலவுகளில் பதிவான முதல் சரிவு இதுவாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி குறைப்பு, பண்டிகைக் காலத்துக்கான முன்கூட்டிய கொள்முதலும் கிரெடிட் கார்டு பயன்பாட்டை அதிகரித்தன. இதன் காரணமாக, 2025 செப்டம்பரில் செலவுகள் ரூ.2.17 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது 2024 செப்டம்பரைவிட சுமார் 23 சதவீதம் அதிகமாக பதிவாகி இருந்தது.

 
கடன் மதிப்பீட்டு நிறுவனமான கேர் எட்ஜ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் கிரெடிட் கார்டு செலவுகள், கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.1.44 லட்சம் கோடியாக இருந்தது. இது நடப்பாண்டு செப்டம்பரில் 12.5 சதவீதம் சரிந்து ரூ.1.26 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.அதே நேரத்தில், கடைகளில் நேரடியாக மேற்கொள்ளப்படும் பாயின்ட் ஆஃப் சேல் (POS) பரிவர்த்தனைகள் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இவ்வகைச் செலவுகள் 7.18 சதவீதம் அதிகரித்து ரூ.77,751.47 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது ரூ.72,543.89 கோடியாக இருந்தது.


வங்கிகளை பொறுத்தவரை, ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வங்கியின் கிரெடிட் கார்டு பயன்பாடு, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், 7.52 சதவீதம் உயர்ந்து ரூ.65,139.72 கோடியாக உள்ளது.எஸ்பிஐ கார்டு பயன்பாடு 14.09 சதவீதம் சரிந்து ரூ.34,895 கோடியாகக் குறைந்துள்ளது.ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு செலவுகள் , கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், 26.26 சதவீதம் சரிந்து ரூ.30,911.48 கோடியாக உள்ளது. ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்பாடு, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், 11 சதவீதம் சரிந்து ரூ.23,148.67 கோடியாக இருந்தது.

கார்டு விநியோகம் அதிகரிப்பு

செலவுகள் குறைந்திருந்தாலும், நாட்டில் கிரெடிட் கார்டுகளின் விநியோகம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 12.531 கோடியாக உயர்ந்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி செப்டம்பரில் புதிதாக 2,80,353 கார்டுகளை வழங்கியுள்ளது. இதையடுத்து, அந்த வங்கியின் மொத்த கார்டுகளின் எண்ணிக்கை 2.737 கோடியாக அதிகரித்துள்ளது.எஸ்பிஐ கார்டு நிறுவனம் 2,08,026 புதிய கார்டுகளை வழங்கி, மொத்த எண்ணிக்கையை 2.316 கோடியாக உயர்த்தியுள்ளது. ஆக்சிஸ் வங்கி 2,59,525 கார்டுகளைச் சேர்த்து மொத்த எண்ணிக்கையை 1.655 கோடியாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி 29,621 புதிய கார்டுகளை வழங்கியதையடுத்து, அதன் மொத்த எண்ணிக்கை 1.986 கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, புதிதாகச் சேர்க்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 10.50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2024 நவம்பருக்குப் பிறகு பதிவான அதிகபட்ச ஆண்டு வளர்ச்சி இதுவாகும்.


கிரெடிட் கார்டு பயன்பாடு

செப்டம்பர் 2025 ரூ.2.17 லட்சம் கோடி

செப்டம்பர் 2026 ரூ.2.04 லட்சம் கோடி

புதிய கிரெடிட் கார்டு விநியோகம் அதிகரிப்பு


வங்கி                           புதிய கார்டுகள்                   மொத்த கார்டுகள்
ஹெச்டிஎப்சி வங்கி       2,80,353                                 2.737 கோடி
எஸ்பிஐ கார்டு                 2,08,026                                 2.316 கோடி
ஐசிஐசிஐ வங்கி                29,621                                  1.986 கோடி
ஆக்சிஸ் வங்கி               2,59,525                                 1.655 கோடி
மொத்தம் 12.531 கோடி


• முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 10.5% வளர்ச்சி.
• நவம்பர் 202க்குப் பிறகு அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.

முந்தைய செய்தி
வறுமையிலிருந்து மீண்ட 25 கோடி மக்கள்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
அடுத்த செய்தி
ஸ்மார்ட்வொர்க்ஸ் Q2 நிகர லாபம் ரூ.25.64 கோடியாக உயர்வு

தொடர்புடைய செய்திகள்