Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஸ்மார்ட்வொர்க்ஸ் Q2 நிகர லாபம் ரூ.25.64 கோடியாக உயர்வு

ஸ்மார்ட்வொர்க்ஸ் Q2 நிகர லாபம் ரூ.25.64 கோடியாக உயர்வு

காலாண்டில் ரூ.25.64 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அலுவலக இடவசதி வழங்கும் நிறுவனமான ஸ்மார்ட்வொர்க்ஸ், இரண்டாவது காலாண்டில் ரூ.25.64 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ரூ.3.13 கோடி அளவுக்கு நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. இந்நிலையில், இதன் மொத்த வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.441.06 கோடியிலிருந்து 37 சதவீதம் உயர்ந்து ரூ.605.3 கோடியை எட்டியுள்ளது.


நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான நிதிஷ் சார்தா கூறுகையில், "நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நிறுவனம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த காலாண்டில் ரூ.25.64 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. சர்வதேச நிறுவனங்கள், முன்னணி இந்திய தொழில் குழுமங்கள் மற்றும் உலகளாவிய நிறுவன மையங்களின் அலுவலக இடங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது எங்களுக்கு வலிமை சேர்த்துள்ளது" என்றார்.


ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களிடமிருந்து இடங்களைக் குத்தகைக்கு எடுத்து நவீன பணிச் சூழல் கொண்ட அலுவலக வளாகங்களை நிர்வகிக்கும் ஸ்மார்ட்வொர்க்ஸ், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள 15 முக்கிய நகரங்களில் 71 மையங்களுடன் 1.75 கோடி சதுர அடி பரப்பளவிலான அலுவலகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
கிரெடிட் கார்டு பயன்பாடு 6 சதவீதம் சரிவு
அடுத்த செய்தி
முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக நிர்ணயம்

தொடர்புடைய செய்திகள்