Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விமானங்களை மாற்ற ஏர் இந்தியா, இண்டிகோ முடிவு

விமானங்களை மாற்ற ஏர் இந்தியா, இண்டிகோ முடிவு

தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் தங்களது விமானச் சேவைகளை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, புதிய நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்குப் படிப்படியாக மாற்ற முடிவு செய்துள்ளன.

 மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இங்கு ஏற்படும் இடப்பற்றாக்குறை மற்றும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பழைய முனையம் 1-ஐ அகற்றிவிட்டு அதிநவீன வசதிகளுடன் புதிய முனையத்தைக் கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை எளிதாக்கும் வகையில், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு விமான சேவைகளை மாற்றுவதற்கான இறுதித் திட்டத்தை ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் வகுத்துள்ளன.


இந்த இடமாற்றப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்குகின்றன. முதல்கட்டமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது 4 தினமும் உள்நாட்டு விமானச் சேவைகளை டிசம்பர் மாதத்தில் நவி மும்பைக்கு மாற்றுகிறது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏர் இந்தியா குழுமத்தின் முக்கிய வளைகுடா மற்றும் சர்வதேச விமானங்கள் அங்கிருந்து இயக்கப்பட உள்ளன. பின்னர், பிப்ரவரி முதல் ஜூலை மாதத்திற்குள் இண்டிகோ நிறுவனம் தனது 12 சர்வதேச விமானங்களையும், அவற்றுக்கு இணைப்பு தரும் குறிப்பிட்ட உள்நாட்டு விமானங்களையும் நவி மும்பை விமான நிலையத்துக்குப் படிப்படியாக இடமாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


விமானங்கள் மாற்றப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் புறப்படும் முனையம் குறித்த விவரங்கள் முன்கூட்டியே பயணிகளுக்குக் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப்படும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இந்த நடவடிக்கையின் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் மீதான சுமை குறையும். புதிய நவி மும்பை விமான நிலையம் முழு வீச்சில் செயல்பட்டு பயணிகளுக்கு விரைவான மற்றும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
ஏஐ வேலைவாய்ப்புகளை பறித்துவிடாது: சென்னை ஐஐடி ஆய்வறிக்கையில் தகவல்
அடுத்த செய்தி
தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் - மனு தள்ளுபடி

தொடர்புடைய செய்திகள்