Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏஐ வேலைவாய்ப்புகளை பறித்துவிடாது: சென்னை ஐஐடி ஆய்வறிக்கையில் தகவல்

ஏஐ வேலைவாய்ப்புகளை பறித்துவிடாது: சென்னை ஐஐடி ஆய்வறிக்கையில் தகவல்
ஏஐ தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்ட சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.

குறைந்த செலவிலான ஏஐ கருவிகள் சிறு நிறுவனங்களுக்கு உதவலாம்.அதேநேரத்தில், புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியமாகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிய, ஒவ்வொரு பணியின் அடிப்படையிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏஐ சில பணிகளை மாற்றினாலும், முழு வேலைவாய்ப்புகளையும் பறித்துவிடாது என்பதை விளக்கும் ஆய்வறிக்கையை, பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மையம் (CeRAI) சென்னையில் வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி-யின் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் (WSAI) கீழ் செயல்படும் சிஇஆர்ஏஐ மையம் இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது.

இது தொடர்பாக சிஇஆர்ஏஐ தலைவர் பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன் கூறும்போது, "ஒரு வேலையில் உள்ள சில பணிகளை மட்டுமே ஏஐ மேற்கொள்ள முடியும். பணியின் தன்மை, தொழில்துறை, செலவு மற்றும் விதிமுறைகளைப் பொறுத்து அதன் தாக்கம் அமையும்" என்றார்.

வாடிக்கையாளர் சேவை மையங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், சட்டத் துறை, மென்பொருள் துறை உள்ளிட்டவற்றில் ஏஐ ஏற்படுத்தும் மாற்றங்களை இந்த ஆய்வறிக்கை விளக்குகிறது. ஏஐ சில பணிகளை மேற்கொண்டாலும், அதனால் முழு வேலைவாய்ப்பும் மறைந்துவிடாது. புதிய பொறுப்புகளும் உருவாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த செலவிலான ஏஐ கருவிகள் சிறு நிறுவனங்களுக்கு உதவலாம். அதேநேரத்தில், புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியமாகிறது. சிறு நிறுவனங்களில் ஏஐ பயன்பாட்டை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வுகளை அதிகரித்தல், ஊழியர்களுக்குப் புதிய திறன் பயிற்சி வழங்குதல் ஆகியவற்றை ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.



முந்தைய செய்தி
6 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
அடுத்த செய்தி
விமானங்களை மாற்ற ஏர் இந்தியா, இண்டிகோ முடிவு

தொடர்புடைய செய்திகள்