Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் - மனு தள்ளுபடி

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் - மனு தள்ளுபடி

6 எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பகிரவும் WhatsApp Facebook

திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தொடர்ந்து, தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

 
இவர்களது ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எம். சீனிவாசன் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர் தரப்பில், அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதன் மூலம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான தகுதி நீக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாக வாதிடப்பட்டது. மேலும், கட்சி மாறிய விவகாரத்தில் குதிரை பேரம், பணம் உள்ளிட்ட ஆதாயங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.


இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “ஒருவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராகப் பொறுப்பேற்பது அரசியல் நடைமுறையின் ஒரு பகுதிதான். ராஜினாமா தொடர்பான அரசியலமைப்புச் சட்ட விவகாரத்தையும், குற்றச்சாட்டுகள் தொடர்பான காவல்துறை விசாரணையையும் தனித்தனியாக அணுக வேண்டும் முதல் தகவல் அறிக்கை தொடர்பான விசாரணை நடைபெறட்டும்” என்று தெரிவித்தனர்.


இதையடுத்து, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களுக்கு எதிரான ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முந்தைய செய்தி
விமானங்களை மாற்ற ஏர் இந்தியா, இண்டிகோ முடிவு
அடுத்த செய்தி
தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்சினை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்

தொடர்புடைய செய்திகள்