Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மூளை ஆராய்ச்சியில் உலகுக்கே சென்னை ஐஐடி வழிகாட்டுகிறது - பிரதமர்

மூளை ஆராய்ச்சியில் உலகுக்கே சென்னை ஐஐடி வழிகாட்டுகிறது - பிரதமர்

இந்தப் பணிக்கு மிகவும் சக்திலவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

மூளை ஆராய்ச்சியில் உலகுக்கே சென்னை ஐஐடி வழிகாட்டும் வகையில் ஆய்வு நடத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தில் (brain imaging technology platform) மூளை வரைபடத் தொழில்நுட்ப தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதன் வாயிலாக மனித மூளையின் உயர் தெளிவுத்திறன் டிஜிட்டல் 3-டி படங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் இலக்கு 100 மனித மூளைகளின் 3-டி மேப்பிங் செய்து, அவற்றை நுணுக்கமாக ஆராய்வதுதான். ஒட்டுமொத்த உலகிலுமே இதுவே முதல் முயற்சி. இந்தப் பணிக்கு மிகவும் சக்திலவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஐஐடியின் பல முன்னாள் மாணவர்களும், கல்வியாளர்களும் இந்த ஆய்வு மையத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அறிவியல் முன்னேற்றத்தை தாண்டி, மனித மூளை பெரிய புதிராகவே இருக்கிறது. அல்சைமர் நோய் எனும் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு, டிமென்ஷியா என்ற அறிவாற்றல் இழப்பு போன்ற நோய்களுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. எந்த அளவுக்கு மூளையின் செயல்பாட்டை அறிவியல் விளங்கிக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு வருங்காலத்தில் புதிய சாத்தியக்கூறுகள் உருவாகும்.

சென்னை மெட்ரோவில் நான் சந்தித்த ஸ்டார்ட்அப்புகளில் ஒருவர் கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறிதலில், எவ்வாறு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்பதில் ஈடுபட்டுள்ளார். ஐஐடியில் நடந்த கலந்துரையாடல் ஆழ்தொழில்நுட்பத்தின் எடுத்துக்காட்டாய் திகழ்ந்தது. 

ஸ்டார்ட்அப்-களுக்கு சென்னை ஐஐடி இன்குபேஷன் சூழலமைப்பு உதவியாக உள்ளது. ஒரு ஸ்டார்ட்அப் கடலுக்கு மேலே பறக்கும் மின் வாகனத்தை மேம்படுத்தி வருகிறது. மற்றொரு ஸ்டார்ட்அப் ட்ரோன்கள் மற்றும் மின் வாகனங்களுக்கு விரைவான மின்னேற்றம் அடையும் பேட்டரிகளைத் தயாரித்து வருகிறது. இவ்வாறு சென்னையைப் பற்றி பிரதமர் மோடி பாராட்டிப் பேசியுள்ளார்.

முந்தைய செய்தி
Action against firecracker shops violating safety norms
அடுத்த செய்தி
திமுகவின் நலத் திட்டங்களை தவெக கைவிடக் கூடாது - மா.சுப்பிரமணியன்

தொடர்புடைய செய்திகள்