Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திமுகவின் நலத் திட்டங்களை தவெக கைவிடக் கூடாது - மா.சுப்பிரமணியன்

திமுகவின் நலத் திட்டங்களை தவெக கைவிடக் கூடாது - மா.சுப்பிரமணியன்

நல திட்டங்களை தவெக அரசு கைவிடக் கூடாதென முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பகிரவும் WhatsApp Facebook

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த நல திட்டங்களை தவெக அரசு கைவிடக் கூடாதென முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


தேனி மாவட்டம் குரங்கணி மலைக் கிராமத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். 


பின்னர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 2.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர். "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48, இதயம் காப்போம் என திமுக ஆட்சியில் ஏராளமான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. 

இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை கைவிட நினைக்கும் அரசை, மக்கள் கைவிட்டு விடுவார்கள். எனவே, திமுக அரசில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை கைவிடக் கூடாது" என்றார்.

முந்தைய செய்தி
மூளை ஆராய்ச்சியில் உலகுக்கே சென்னை ஐஐடி வழிகாட்டுகிறது - பிரதமர்
அடுத்த செய்தி
கடவுச்சொற்களை திருட முயற்சிக்கும் ‘கேப்சா’ - இணையதளத்தில் கவனமா இருங்க...

தொடர்புடைய செய்திகள்