Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பாட்டாவின் புதிய வடிவமைப்பு தூதராக நடிகை ரகுல்ப்ரீத் சிங் நியமனம்

பாட்டாவின் புதிய வடிவமைப்பு தூதராக நடிகை ரகுல்ப்ரீத் சிங் நியமனம்
நடிகை ரகுல் ப்ரீத்சிங்.

பாட்டா நிறுவனம் தனது புதிய ‘Comfort, but make it festive’ என்ற பெயரில் புதிய காலணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பாட்டா நிறுவனம் தனது புதிய ‘Comfort, but make it festive’ என்ற பெயரில் புதிய காலணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பாரம்பரிய மற்றும் பண்டிகை ஆடைகளுக்கு உயர்தர வேலைப்பாடுகள் கொண்ட தட்டையான காலணிகளை (Embellished Flats) முதல் தேர்வாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சேகரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பு காயம் காரணமாக உயர்மட்ட ஹீல்ஸ் (Heels) காலணிகளைத் தவிர்த்து வரும் ரகுல் ப்ரீத் சிங், இந்த பிரச்சாரத்துடன் தனக்குள்ள தனிப்பட்ட தொடர்பைப் பகிர்ந்து கொண்டார். "காயத்திலிருந்து மீண்டு வரும் காலத்தில் வசதியான காலணிகளுக்கே நான் முன்னுரிமை அளித்தேன். பாட்டா நிறுவனத்தின் இந்த புதிய கலெக்சஷன் நவீன பாணியையும், நடப்பதற்கு ஏதுவான வசதியையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது," என அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பாட்டா இந்தியாவின் மார்க்கெட்டிங் தலைவர் ஜாஸ்லீன் கவுர் கூறுகையில், "பண்டிகை நாட்களில் மக்கள் அழகாகவும், அதே சமயம் சௌகரியமாகவும் உணர விரும்புகிறார்கள். இந்த எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், பண்டிகை கால ஸ்டைலையும் சொகுசான வசதியையும் இணைத்து இந்த புதிய தயாரிப்புகளை உருவாக்கியுள்ளோம்" என்றார்.


முந்தைய செய்தி
ஓலா எலெக்ட்ரிக் பங்கு உரிமைகள் 1.21 கோடியை விற்ற சாஃப்ட்பேங்க்
அடுத்த செய்தி
தெற்கு ரயில்வேயில் 127 மையங்களில் 45 பைசா இன்சூரன்ஸ் திட்டம் இன்று அமல்

தொடர்புடைய செய்திகள்