Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஓலா எலெக்ட்ரிக் பங்கு உரிமைகள் 1.21 கோடியை விற்ற சாஃப்ட்பேங்க்

ஓலா எலெக்ட்ரிக் பங்கு உரிமைகள் 1.21 கோடியை விற்ற சாஃப்ட்பேங்க்

ஓலா எலக்ட்ரிக்கில் சாஃப்ட்பேங்க் 11.70 சதவீதப் பங்குகளை வைத்திருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உரிமைப் பங்கு வெளியீடு மூலம் ரூ.1,000 கோடி திரட்டும் நிலையில், சாஃப்ட்பேங்க் தனது உரிமைப் பங்குகளை வாங்குவதற்கான உரிமைகளில் சுமார் 28 சதவீதத்தை விற்பனை செய்துள்ளது.

ஜப்பானின் சாஃப்ட்பேங்க் குழும முதலீட்டு நிறுவனமான எஸ்விஎஃப் II ஆஸ்ட்ரிச், கடந்த 22, 23-ம் தேதிகளில் மொத்தம் 1.21 கோடி உரிமைகளை விற்றுள்ளதாக தேசிய பங்குச் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.


அக்டோபர் 22-ம் தேதி 82.93 லட்சம் உரிமைகள் தலா ரூ.3.64-க்கும், மறுநாள் 38.08 லட்சம் உரிமைகள் தலா ரூ.2.28-க்கும் விற்கப்பட்டன. செப்டம்பர் நிலவரப்படி, ஓலா எலக்ட்ரிக்கில் சாஃப்ட்பேங்க் 11.70 சதவீதப் பங்குகளை வைத்திருந்தது.
இந்த வெளியீட்டில், ஏற்கெனவே வைத்துள்ள ஒவ்வொரு 25 பங்குகளுக்கும் இரண்டு புதிய பங்குகளை வாங்கலாம். பங்கு ஒன்றின் விலை ரூ.27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது ரூ.16.20 செலுத்த வேண்டும்; மீதமுள்ள ரூ.10.80 பின்னர் வசூலிக்கப்படும்.


கடந்த 22-ம் தேதி தொடங்கிய வெளியீடு வரும் 30-ம் தேதி நிறைவடைகிறது. உரிமைகளை சந்தையில் விற்க அல்லது மாற்ற அக்டோபர் 26 கடைசி நாளாகும்.
இதனிடையே, மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் காலியோப் கேப்பிட்டல் அட்வைசர்ஸ் இணைந்து 2.39 கோடி பங்குகளுக்கு விண்ணப்பித்துள்ளன.
ஓலா எலக்ட்ரிக்கின் வருவாய் சரிவும், நஷ்டமும் தொடரும் சூழலில் இந்த நிதி திரட்டல் நடைபெறுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய் ரூ.455 கோடியாகக் குறைந்தது; நிகர நஷ்டம் ரூ.336 கோடியாக இருந்தது.


முன்னதாக, ஜூன் மாதத்தில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு மூலம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.780 கோடி திரட்டியது. செப்டம்பரில் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனப் பதிவுகள் 12,894-ஆகவும், சந்தைப் பங்கு 6.5 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
ஐபிஓ ஆவணங்களை வெளியிட்டது ஆந்த்ரோபிக்
அடுத்த செய்தி
பாட்டாவின் புதிய வடிவமைப்பு தூதராக நடிகை ரகுல்ப்ரீத் சிங் நியமனம்

தொடர்புடைய செய்திகள்