Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தெற்கு ரயில்வேயில் 127 மையங்களில் 45 பைசா இன்சூரன்ஸ் திட்டம் இன்று அமல்

தெற்கு ரயில்வேயில் 127 மையங்களில் 45 பைசா இன்சூரன்ஸ் திட்டம் இன்று அமல்
பகிரவும் WhatsApp Facebook

தெற்கு ரயில்வேயில் 127 மையங்களில் 45 பைசா இன்சூரன்ஸ் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களில், ஐஆர்சிடிசி உள்ளிட்ட ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது விருப்ப காப்பீடு திட்டத்தில் இணையும் வசதி 2016 செப்டம்பர் முதல் அமலில் உள்ளது. இந்நிலையில், வழக்கு ஒன்றில் அக்.6ம் தேதி உச்ச நீதிமன்றம், ‘இந்த விருப்ப காப்பீடு திட்டத்தை முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்பவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள முன்பதிவு மையங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விருப்ப காப்பீடு திட்டம் அமலுக்கு வருகிறது. 


பயணிகள் விரும்பினால் காப்பீடு கட்டணமாக பயணி ஒருவருக்கு 45 பைசா (வரிகள் உட்பட) கூடுதலாக வசூலிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள 127 முன்பதிவு மையங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள சுமார் 2926 மையங்களில் இந்த விருப்ப காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, முன்பதிவு செய்பவர்களுக்கு காப்பீடு குறித்து ரயில்வே ஊழியர்கள் விளக்க வேண்டும். பயணிகள் விரும்பினால் முன்பதிவு உடன் காப்பீடு கட்டணத்தை வசூலிக்கலாம். ஆனால் இந்த காப்பீடு கட்டணம் 45 பைசா என்பதால் நேரடியாக வசூலிப்பது கடினம். ஏனென்றால் ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணயங்கள் இப்போது புழக்கத்தில் இல்லை.

எனவே முன்பதிவின் போது கிரெடிட், டெபிட் அட்டைகள், கூகுள் பே என டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே காப்பீடு வசதி கிடைக்கும். மீண்டும் ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே பயணக்காப்பீடு பெறும் வசதி தொடரும். நாடு முழுவதும் ஓடும் ரயில்களுக்கான முன்பதிவில் சுமார் 88 சதவீதம் இணையத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றன. எஞ்சிய 11 முதல் 12 சதவீதம் மட்டுமே முன்பதிவு மையங்களில் செய்யப்படுகின்றன.

முந்தைய செய்தி
பாட்டாவின் புதிய வடிவமைப்பு தூதராக நடிகை ரகுல்ப்ரீத் சிங் நியமனம்
அடுத்த செய்தி
Talent, R&D key to India's AI ambitions

தொடர்புடைய செய்திகள்