Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நூல் விலையில் மாற்றமில்லை: பின்னலாடை உற்பத்தியாளர்கள் நிம்மதி

நூல் விலையில் மாற்றமில்லை: பின்னலாடை உற்பத்தியாளர்கள் நிம்மதி

கடந்த மாதம் குறைக்கப்பட்ட கிலோவுக்கான ரூ.15 விலைக் குறைப்புக்குப் பிறகு, தற்போது நூல் விலையில் உயர்வோ, குறைவோ செய்யப்படவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

பஞ்சு விலை சரிவைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் கிலோவுக்கு ரூ.15 குறைக்கப்பட்ட நூல் விலையில், தற்போது எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி பிரதான தொழில்களாக உள்ளன. குறிப்பாக, திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இத்தொழிலின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையில் ஏற்படும் மாற்றங்கள் பின்னலாடை உற்பத்திச் செலவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலையிலும் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நூல் விலை, கடந்த அக்டோபர் 1-ம் தேதி வெளியான அறிவிப்பில் கிலோவுக்கு ரூ.15 வரை குறைக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணமாக பஞ்சு விலை சரிவு தெரிவிக்கப்பட்டது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.73,000-ஆக இருந்த நிலையில், பின்னர் ரூ.65,000-ஆகக் குறைந்தது. இதன் எதிரொலியாக நூற்பாலைகள் நூல் விலையைக் குறைத்து அறிவித்தன. இதற்கு முன்பு தொடர்ந்து 8 மாதங்களாக நூல் விலை உயர்ந்து வந்த நிலையில், அக்டோபர் மாத விலைக் குறைப்பு பின்னலாடைத் தொழில்துறையினருக்கு ஓரளவு நிம்மதியை அளித்தது.

இந்நிலையில், தற்போது நடப்பு மாதத்துக்கான நூல் விலை அறிவிப்பை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன. இதில் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் குறைக்கப்பட்ட கிலோவுக்கான ரூ.15 விலைக் குறைப்புக்குப் பிறகு, தற்போது நூல் விலையில் உயர்வோ, குறைவோ செய்யப்படவில்லை.

தொடர்ந்து உயர்ந்து வந்த நூல் விலை குறைக்கப்பட்டதுடன், தற்போது அதே விலை நீடிப்பதும் உற்பத்தியாளர்களுக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.


நூல் விலை விவரம்

ஒரு கிலோ 10-ம் நம்பர் கோம்டு நூல் - ரூ.250

16-ம் நம்பர் கோம்டு - ரூ.259

20-ம் நம்பர் கோம்டு - ரூ.318

24-ம் நம்பர் கோம்டு - ரூ.330

30-ம் நம்பர் கோம்டு - ரூ.340

34-ம் நம்பர் கோம்டு - ரூ.360

40-ம் நம்பர் கோம்டு - ரூ.378

20-ம் நம்பர் செமி கோம்டு நூல் - ரூ.315

24-ம் நம்பர் செமி கோம்டு - ரூ.323

30-ம் நம்பர் செமி கோம்டு - ரூ.326

34-ம் நம்பர் செமி கோம்டு - ரூ.349

40-ம் நம்பர் செமி கோம்டு - ரூ.368

முந்தைய செய்தி
India's consumption growth may lose steam: Axis Bank
அடுத்த செய்தி
Brief ceasefire opens perilous escape window

தொடர்புடைய செய்திகள்