Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தானாக ஓடி தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்

தானாக ஓடி தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்
ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில் பெட்டிகள்.

இந்த விபத்தால் பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

ஜோலார்பேட்டையில் சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால், சென்னை - பெங்களூர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள யார்டில் இன்ஜின் இல்லாமல் சரக்கு ரஓயிலின் 8 காலி பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பெட்டிகளின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும், வீல் சாக்ஸ் ( ரயில் சக்கரம் நகராமல் தடுக்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு) வைக்காமல் இருந்ததால், தானாக நகர்ந்து 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றது. இந்த நிலையில் தாமலேரி முத்தூர் பகுதியில் பயங்கர சத்தத்துடன் ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி 7 பெட்டிகள் தடம் புரண்டன.

தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் மற்ற ரயில்கள் இயக்கத்துக்கு தடை விதித்தனர். இதனால், பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்து மீண்டும் யார்டுக்கு கொண்டு வந்தனர். நிலைமை சீரான பிறகு வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

பொதுவாக சரக்கு ரயில்கள் நிறுத்தும்போது வீல் சாக்ஸ் வைக்கப்படுவது வழக்கம், அது வைக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் .

முந்தைய செய்தி
கேப்ரியல் இந்தியா பங்குக்கு ரூ.1,500 இலக்கு விலை
அடுத்த செய்தி
ஆரியன்புரோ பங்குக்கு 60% உயர்வு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்