Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹவுதி தாக்குதலில் ஏமன் ராணுவவீரர்கள் 73 பேர் உயிரிழப்பு

ஹவுதி தாக்குதலில் ஏமன் ராணுவவீரர்கள் 73 பேர் உயிரிழப்பு

காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரை தேடி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 ராணுவவீரர்கள் உயிரிழந்தததாகவும் மேலும் பலரை தேடி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திங்களன்று ஏமனின் தெற்குப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அந்த முகாமில் இளம் ராணுவவீரர்கள் சுமார் 200 பேர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரை தேடி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலுக்கு முன்னதாக ஹவுதி முகாம்கள் மீது 3 பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சவூதிஅரேபியாவின் வடக்கு ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச வ ிமான நிலையத்தில் பயங்க வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. தங்கள் மீது ஹவுதிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
TSMC plans 3nm second semicon unit
அடுத்த செய்தி
தாராபுரத்தில் நாதக வேட்பாளர் உள்பட 10 பேர் கைது

தொடர்புடைய செய்திகள்