Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காங்கோவில் எபோலா காய்ச்சலால் 5,000 பேர் உயிரிழப்பு

காங்கோவில் எபோலா காய்ச்சலால் 5,000 பேர் உயிரிழப்பு

கடந்த மே மாதம் தொடங்கிய இந்தத் தொற்று, காங்கோவின் 8 மாகாணங்களுக்குப் பரவியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அந்நாட்டில் சுகாதார அவசரநிலை தீவிரமடைந்துள்ளது.

கடந்த மே மாதம் தொடங்கிய இந்த நோய்த்தொற்றால் இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புண்டிபுக்யோ வகை எபோலா வைரஸ் இந்தப் பரவலுக்குக் காரணமாகும். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ, சிகிச்சை மருந்தோ இதுவரை இல்லை.

நோயைக் கண்டறிவதில் தாமதம், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகள், மருத்துவ வசதிகள் பற்றாக்குறை ஆகியவை உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக உள்ளன. காங்கோவின் 26 மாகாணங்களில் 8 மாகாணங்களுக்கு நோய் பரவியுள்ளது.

2014-16-ம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பாதிப்புக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய இரண்டாவது எபோலா பாதிப்பாக இது உருவெடுத்துள்ளது. நைஜீரியா, கென்யா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

முந்தைய செய்தி
ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

தொடர்புடைய செய்திகள்