Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழகத்தில் ஜியோவுக்கு 2.56 கோடி மொபைல் சந்தாதாரர்கள்

தமிழகத்தில் ஜியோவுக்கு 2.56 கோடி மொபைல் சந்தாதாரர்கள்

ஜியோவின் தேசியச் சந்தைப் பங்கு 65.4 சதவீதமாக உள்ளதாகவும், வளர்ச்சி தொடர்வதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2026 செப்டம்பரில் 2.56 கோடியைக் கடந்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் தரவுகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 73,321 புதிய மொபைல் சந்தாதாரர்களை ஜியோ சேர்த்துள்ளது. மாநிலத்தில் அதன் சந்தாதாரர்களின் செயல்பாட்டு விகிதம் உச்ச நாளில் 97.54 சதவீதமாக இருந்துள்ளது. இது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட அதிகம் .
தமிழகத்தில் ஜியோவின் பிராட்பேண்ட் இணையச் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 17.5 லட்சத்தைக் கடந்துள்ளது. ட்ரூ 5ஜி அடிப்படையிலான நிலையான கம்பியில்லா இணையச் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.30 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

தேசிய அளவில், ஜியோவின் மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 51.11 கோடியாகவும், பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 3.12 கோடியாகவும் உயர்ந்துள்ளது. செப்டம்பரில் நாடு முழுவதும் 27.1 லட்சம் புதிய மொபைல் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. பிராட்பேண்ட் பிரிவில் புதிதாக 4,48,134 சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இப்பிரிவில் ஜியோவின் தேசியச் சந்தைப் பங்கு 65.4 சதவீதமாக உள்ளதாகவும், வளர்ச்சி தொடர்வதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளது.

முந்தைய செய்தி
மதர்சன் சுமி வருவாய் 47% உயர்வு
அடுத்த செய்தி
டிக்சன், சிர்மா வருவாய் அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்