Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எது அசல் 'Hippie' Porsche?..உரிமை கொண்டாடும் இரு தரப்பு

எது அசல் 'Hippie' Porsche?..உரிமை கொண்டாடும் இரு தரப்பு

2026-ல் வெளியான தகவல்கள், தொழிற்சாலை ஆவணங்கள், பந்தயப் பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்ததில் சிட்னர் தரப்பின் காரே அசல் 917-043 என்று ஆதரிக்கின்றன.

பகிரவும் WhatsApp Facebook

பந்தயப் பாதையில் மின்னல் வேகம்; வெளித்தோற்றத்தில் நகரும் வண்ண ஓவியம்! ஊதாவும் பச்சையும் சுழன்றோடும் அலங்காரத்துடன் ரசிகர்களை வசீகரித்த போர்ஷே ‘ஹிப்பி கார்’, இப்போது தனது அடையாளத்தாலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வரலாற்றுக்கு இரண்டு கார்கள் உரிமை கோரினால் என்ன நடக்கும்? பழைய ஆவணங்கள், சேசிஸ் எண்கள், முன்னாள் மெக்கானிக்குகளின் நினைவுகள் எனத் துப்பறியும் படத்துக்கு இணையான தேடல் தொடங்கும்!

1970-ல் பிரான்சின் லீ மான்ஸ் 24 மணி நேரப் பந்தயத்தில், கொட்டும் மழைக்கு நடுவே இரண்டாவது இடத்தைப் பிடித்தது போர்ஷே 917 எல்.எச். ஜெரார்ட் லாரூஸ், வில்லி காஹ்சென் இணைந்து ஓட்டிய அந்தக் காரின் வண்ணக் கோலத்தை உருவாக்கியவர் வடிவமைப்பாளர் அனடோல் லப்பீன். அன்றைய இளைய தலைமுறையின் கலாசாரத்தைப் பிரதிபலித்ததால், ‘ஹிப்பி கார்’ என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.

அந்தப் புகழ்பெற்ற கார்தான் தங்களிடம் இருப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள சிமியோன் அறக்கட்டளை வாகன அருங்காட்சியகம் நீண்டகாலமாகக் கூறிவந்தது. ஆனால், பிரிட்டனின் முன்னாள் பந்தய வீரர் பிராங்க் சிட்னர் தரப்பிலும் அதே வரலாற்றுடன் மற்றொரு கார் வெளிவந்தது.

2024-ல் மாசிமோ பெட்ராசியிடமிருந்து வாங்கப்பட்ட அந்தக் காரின் சேசிஸ் எண் 917-043. அருங்காட்சியகக் காருடன் தொடர்புடைய எண் 917-044. பந்தயக் காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களும், எண்கள் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதுமே குழப்பத்தின் மையம்.

இது வெறும் வண்ணப்பூச்சுப் பொருத்தம் பற்றிய விவாதமல்ல. எந்தக் காரின் உலோகச் சட்டகம் அன்றைய பந்தயத்தில் பங்கேற்றது, பின்னர் எந்தப் பாகங்கள் மாற்றப்பட்டன என்பதே முக்கியம். தோற்றம் ஒன்றாக இருந்தாலும், வரலாற்றுத் தொடர்ச்சியை நிரூபிக்கும் ஆவணங்கள்தான் அதன் தனித்துவத்தையும் சேகரிப்புச் சந்தை மதிப்பையும் தீர்மானிக்கும்.

எனினும், கதையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2026-ல் வெளியான தகவல்கள், தொழிற்சாலை ஆவணங்கள், பந்தயப் பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்ததில் சிட்னர் தரப்பின் காரே அசல் 917-043 என்று ஆதரிக்கின்றன. அந்தக் கார் 2025-ல் மீண்டும் லீ மான்ஸ் பாதையிலும் வலம் வந்தது.

பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்தாலும், ரசிகர்களின் மனதில் முதலிடம் பிடித்தது ‘ஹிப்பி’ போர்ஷே. அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அதன் பெயரில் நிற்கும் இரண்டு கார்களில் எது அந்தப் பந்தய நாயகன் என்பதில்தான் இப்போது போட்டி.

முந்தைய செய்தி
பூடானின் கெலெஃபு ‘மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி’ பகுதியில் 108 ஸ்தூபிகள்!
அடுத்த செய்தி
செர்பியா ரயில் நிலைய விபத்து 2-ம் ஆண்டு நினைவஞ்சலி

தொடர்புடைய செய்திகள்