Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிளாஸ்டிக் ஸ்ட்ராவைவிட ஆபத்தானது காகித ஸ்ட்ரா

பிளாஸ்டிக் ஸ்ட்ராவைவிட ஆபத்தானது காகித ஸ்ட்ரா

ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பகிரவும் WhatsApp Facebook

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று விளம்பரப்படுத்தப்படும் காகித ஸ்ட்ராக்கள், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தென்கொரிய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த ஆய்வு முடிவுகள் தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பயன்படுத்துவதால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்துவிட முடியுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
தென்கொரியாவின் பருவநிலை, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்ட்ராக்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வு முடிவுகளை எதிர்க்கட்சியான மக்கள் சக்திக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிம் வி-சாங் சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வில் தெரியவந்த முக்கியமான தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் தாக்கம், வழக்கமான பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைவிட காகித ஸ்ட்ராக்களில் 6.33 மடங்கு அதிகமாக இருந்ததாக ஆய்வு தெரிவித்துள்ளது.


இந்த அளவீடு, காகித ஸ்ட்ராவைப் பயன்படுத்துவதால் நேரடியாகப் புற்றுநோய் ஏற்படும் என்று அர்த்தமல்ல. மாறாக, ஒரு பொருளின் முழு வாழ்க்கைச் சுழற்சியிலும் ஏற்படும் உமிழ்வுகளால் உருவாகக்கூடிய புற்றுநோய் தொடர்பான சுற்றுச்சூழல் அபாயத்தைக் குறிக்கிறது.


அதாவது, மூலப்பொருட்களைப் பிரித்தெடுப்பதில் தொடங்கி, அவற்றைச் செயலாக்குவது, பொருளைத் தயாரிப்பது, இறுதியில் அதை அகற்றுவது வரை நடைபெறும் செயல்முறைகள் அனைத்தும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், காகித ஸ்ட்ராக்களின் அமிலமயமாக்கல் தாக்கமும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைவிட 2.04 மடங்கு அதிகமாக இருந்ததாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.


முந்தைய செய்தி
Rajnath Singh cites Operation Sindoor at ADMM-Plus
அடுத்த செய்தி
Lagarde to resign ahead of term as bank chief

தொடர்புடைய செய்திகள்