Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நவீன நகை மாடல்களை வாங்க மக்கள் விருப்பம்

நவீன நகை மாடல்களை வாங்க மக்கள் விருப்பம்

கனமான நகைகளைவிட, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

தங்கம் விலை உயர்ந்துள்ளதால், தீபாவளிக்கு கனமான நகைகளுக்குப் பதிலாக இலகுரக (எடை குறைவான) 14, 18 காரட் தங்க நகைகளை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம் விலை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற நகைகளை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அணியும் கனமான நகைகளைவிட, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.


குமாரி ஃபைன் ஜுவல்லரி நிறுவனர் சுப்ரியா கட்டாரியா கூறுகையில், "தசரா பண்டிகையின்போது தங்கள் நிறுவனத்தின் விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்தது. தீபாவளி, திருமணக் காலத்திலும் நகைகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது" என்றார்.

 
பிஎன்ஜி ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவித்ததாவது: தங்கத்தின் விலை உயர்வால், பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளை வாங்குவது அதிகரித்துள்ளது. கனமான பழைய நகைகளுக்குப் பதிலாக இலகுரக வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். வைரம், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் விற்பனையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்க (IBJA) மதிப்பீட்டில் கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில், இதே மாதத்தில் தங்க நகை விற்பனை அளவு சுமார் 11 சதவீதம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தங்க நகைகளை முதலீட்டு நோக்கில் வாங்குவோர், செய்கூலி, கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் விலை மற்றும் மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நகையை விற்கும்போது வாங்கிய முழுத் தொகையும் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை இவ்வாறு பிஎன்ஜி ஜுவல்லர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
முட்டைக்கோழி விலை கிலோ ரூ.92 ஆக நிர்ணயம்
அடுத்த செய்தி
ரூ.3,767 கோடியில் 8 புதிய தொழில் நிறுவனங்கள்

தொடர்புடைய செய்திகள்