Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மரபணு ரீதியான கொலஸ்ட்ரால் - உணவுப் பழக்கத்தால் குறைக்கலாம்?

மரபணு ரீதியான கொலஸ்ட்ரால் - உணவுப் பழக்கத்தால் குறைக்கலாம்?

மரபணுக்கள் மட்டுமே மனித ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில்லை.

பகிரவும் WhatsApp Facebook

உணவுப் பழக்கத்தால் மரபணு ரீதியான கொலஸ்ட்ரால் பாதிப்பைக் குறைக்கலாம் என்று சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 சர்வதேச அறிவியல் இதழான ப்லாஸ் ஒன் -இல் வெளியாகியுள்ள இந்த ஆய்வானது, சென்னையில் 25 முதல் 80 வயதுக்குட்பட்ட 1,020 பேரின் உடல்நலத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. இதில் நீரிழிவு மற்றும் உடலின் வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய மரபணு மாற்றங்களும், பங்கேற்பாளர்களின் உணவு முறைகளும் ஆய்வு செய்யப்பட்டன.


இதுகுறித்து டாக்டர் வி.மோகன் கூறும்போது, "மரபணுக்கள் மட்டுமே மனித ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில்லை. சத்தான உணவு மரபணு அபாயத்தைச் சமன்செய்கிறது" என்றார். ரீடிங் பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி பேராசிரியர் கே.எஸ்.விமலேஸ்வரன் கூறும்போதுக "மனிதர்களால் மரபணுக்களை மாற்ற இயலாது.

 காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற சத்தான உணவுகளை உட்கொண்டு, சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலைப் பாதுகாக்க முடியும்" என்றார்.


 பரம்பரையாக நீரிழிவு அல்லது கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது உணவு முறையில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இவ்வாய்வு உணர்த்துகிறது. மேலும், எதிர்காலத்தில் தனிநபரின் மரபணுவுக்கு ஏற்ற உணவு ஆலோசனைகளை வழங்கும் முறைக்கு இது சிறந்த தொடக்கமாக அமையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு - 5வது நாளாக குளிக்க தடை
அடுத்த செய்தி
ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் - Jio IPO உலக சாதனை

தொடர்புடைய செய்திகள்