Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மக்களை கவர்ந்த உலக பூசணிக்காய் போட்டி - அதுவும் எங்கே பாருங்க..

மக்களை கவர்ந்த உலக பூசணிக்காய் போட்டி - அதுவும் எங்கே பாருங்க..
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத பூசணிக்காய்கள். படம்: ஏபி/பிடிஐ.

இப்போட்டியில் சுமார் 45 பேர் பங்கேற்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வருடாந்திர அறுவடை திருவிழாவையொட்டி நடந்த உலக பூசணிக்காய் எடைப் போட்டியில், மினசோட்டாவைச் சேர்ந்த டிராவிஸ் கீங்கர் வளர்த்த 1,084 கிலோ ராட்சத பூசணிக்காய் முதலிடம் பெற்றது.

ஹாஃப் மூன் பே நகரில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 45 பேர் பங்கேற்றனர். இதில் கலந்துகொள்வதற்காக கீங்கர் தனது பூசணிக்காயை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுமார் 3,460 கிலோமீட்டர் பயணம் செய்தார்.


சாலையின் மேடு பள்ளங்கள் மற்றும் வாகன அதிர்வுகளால் பயணம் சவாலாக இருந்ததாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, தாஹோ பகுதியைக் கடக்கும்போது பதற்றத்துடன் வாகனத்தை இயக்கியதாகக் கூறினார்.


ஏற்கெனவே நான்கு முறை இப்போட்டியில் வென்றுள்ள கீங்கர், தற்போது ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் வளர்த்த பூசணிக்காய் சுமார் 1,247 கிலோ எடையுடன் சாதனை படைத்திருந்தது.


இந்த ஆண்டு பூசணிக்காயின் எடை குறைந்திருந்தாலும், மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹாஃப் மூன் பே நகரம், போட்டி மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீதான விருப்பமே தன்னை ஆண்டுதோறும் இங்கு வரவழைப்பதாக கீங்கர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.



முந்தைய செய்தி
எண்ணெய் கையிருப்பை அதிகரிக்க ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி
ஆர்க்டிக் பனி உருகுவதைத் தடுக்க பாக்டீரியா - 17 வயது மாணவர் அசத்தல்

தொடர்புடைய செய்திகள்