Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூபாய் மதிப்பை சந்தையே தீர்மானிக்கட்டும்: ஐஎம்எஃப்

ரூபாய் மதிப்பை சந்தையே தீர்மானிக்கட்டும்: ஐஎம்எஃப்

ரூபாயின் மதிப்பு சரிவதால் நாட்டில் பரவலான விலை உயர்வு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், விலை நிலைத்தன்மையைப் பாதுகாக்க பணவியல் கொள்கையை இறுக்கமாக்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவுக்கு ஏற்படும் எரிசக்தி விலை அதிர்ச்சிகளைச் சமாளிப்பதில் ரூபாயின் மதிப்பை முதல் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலி கோசாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எரிசக்தி விலை உயர்வு உள்ளிட்ட வெளிப்புறப் பொருளாதார அதிர்வுகளை எதிர்கொள்ளும்போது, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ரூபாயின் மதிப்பு சுதந்திரமாக மாற அனுமதிப்பதே இந்தியாவுக்கு சிறந்த அணுகுமுறையாக இருக்கும். இதன் மூலம் ஏற்படும் தாக்கங்களுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியும்.

ரூபாயின் மதிப்பு சரிவதால் நாட்டில் பரவலான விலை உயர்வு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், விலை நிலைத்தன்மையைப் பாதுகாக்க பணவியல் கொள்கையை இறுக்கமாக்குவது குறித்து பரிசீலிக்கலாம். அதாவது, தேவைப்பட்டால் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
சந்தையில் வழக்கத்துக்கு மாறான ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது, அவற்றைக் கட்டுப்படுத்த அந்நியச் செலாவணி சந்தையில் மத்திய வங்கி தலையிடுவது பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ரூபாயின் மதிப்பைச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற அனுமதிப்பதே விரும்பத்தக்க கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் முதல் சுமார் 90 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சம் கோடி) செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரடி சந்தையில் டாலர்களை விற்பனை செய்தது, கரன்சி பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் சந்தையில் நிலவும் அதிகப்படியான பணப்புழக்கத்தை நீக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

ரூபாயின் மதிப்பை செயற்கையாகத் தக்கவைப்பதைவிட, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதன் மதிப்பு மாற அனுமதிப்பதன் மூலம் வெளிப்புறப் பொருளாதார பாதிப்புகளை இந்தியா சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது.

முந்தைய செய்தி
Ministry sets up panel to boost RELIEF scheme for exporters
அடுத்த செய்தி
Centre extends cotton import duty exemption

தொடர்புடைய செய்திகள்