Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விமானத்தை தாக்கிய மின்னல்: அலறிய பயணிகள் - என்ன நடந்தது?

விமானத்தை தாக்கிய மின்னல்: அலறிய பயணிகள் - என்ன நடந்தது?

அப்போது கேட்ட பலத்த சப்தத்தையும், விமானத்தின் உட்பகுதியை ஒரு நொடியில் ஒளிரச் செய்த மின்னல் வெளிச்சத்தையும் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர்

பகிரவும் WhatsApp Facebook

சிலி நாட்டில் தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு லாட்டம் ஏர்லைன்ஸ் விமானத்தை மின்னல் தாக்கிய சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது கேட்ட பலத்த சப்தத்தையும், விமானத்தின் உட்பகுதியை ஒரு நொடியில் ஒளிரச் செய்த மின்னல் வெளிச்சத்தையும் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். எனினும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலி நாட்டின் அன்டோஃபகாஸ்டா நகரிலிருந்து தலைநகர் சாண்டியாகோவுக்குச் சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர், மின்னல் தாக்கிய காட்சியை விடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
விமானத்தை மின்னல் தாக்கியபோது திடீரெனப் பிரகாசமான ஒளி தோன்றியதும், அதை தொடர்ந்து கேட்ட பலத்த சப்தத்தால் பயணிகள் அச்சத்தில் அலறியதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
சாண்டியாகோவில் உள்ள ஆர்டுரோ மெரினோ பெனிடெஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிலி நாட்டின் தலைநகர் பிராந்தியத்தில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்திய தீவிர வானிலைச் சூழலின்போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

இது தொடர்பாக லாட்டம் ஏர்லைன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னல் தாக்கியதால் விமானத்தின் பாதுகாப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோன்ற வானிலை நிகழ்வுகளைத் தாங்கும் வகையில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டு, உரிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மின்னல் தாக்கும்போது உருவாகும் மின் ஆற்றலைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான அமைப்புகள் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளன. மின்னல் தாக்கியபோதிலும், விமானம் வழக்கம்போல தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் சாண்டியாகோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கினர்" என்று தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களது செயல்பாடுகளில் முதன்மையானது என்றும், அதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை என்றும் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது.
முந்தைய செய்தி
சீன டைட்டானியம் இறக்குமதிக்கு 5 ஆண்டு பொருள் குவிப்பு தடுப்பு வரி
அடுத்த செய்தி
50 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்களுக்கு ஆபத்து!

தொடர்புடைய செய்திகள்