Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நிதி திரட்டும் இலக்கை ரூ.94,000 கோடி குறைத்தது ஓபன் ஏஐ!

நிதி திரட்டும் இலக்கை ரூ.94,000 கோடி குறைத்தது ஓபன் ஏஐ!

முதலீட்டாளர்கள் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால், முதல் கட்டமாக திரட்டப்படும் தொகை 20 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான ஓபன் ஏஐ, புதிய முதலீட்டுத் திரட்டலுக்கான இலக்கை 10 பில்லியன் டாலர் குறைத்துள்ளது. இதன்படி, 1.25 டிரில்லியன் டாலர் நிறுவன மதிப்பீட்டில் 20 பில்லியன் டாலர் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், இதற்கு முன்பு 1.4 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் 30 பில்லியன் டாலர் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக முதலீட்டாளர்களிடம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. போட்டியாளரான ஆந்த்ரோபிக் நிறுவனம் நவம்பர் மத்தியில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக முதலீடுகளைப் பெற ஓபன் ஏஐ முயற்சித்து வந்தது. முதலீட்டாளர்கள் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால், முதல் கட்டமாக திரட்டப்படும் தொகை 20 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் செலவிட்டு வருவது குறித்த கவலைகளால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஓபன் ஏஐ தனது நிதி திரட்டும் இலக்கைக் குறைத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

முந்தைய செய்தி
சந்தேகத்தால் சரிந்தது அமெரிக்க பங்குச் சந்தை: பல லட்சம் கோடி முதலீடு... லாபம் எங்கே?
அடுத்த செய்தி
UPI expands to UAE, Singapore tourist bookings

தொடர்புடைய செய்திகள்