Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நிலத்தைத் தோண்டாமல் யுரேனியம் எடுக்கும் சீனா

நிலத்தைத் தோண்டாமல் யுரேனியம் எடுக்கும் சீனா

புல்வெளிகளில் அமைக்கப்பட்டுள்ள துளைக்கிணறுகளே உற்பத்தியின் முக்கியக் கட்டமைப்புகளாக உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், பெரிய சுரங்கப் பள்ளங்களை உருவாக்காமல், நிலத்தடியில் கரைசலை செலுத்தி யுரேனியம் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குவதாகத் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இலி படுகையில், தேசிய அணுசக்திக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜின்ஜியாங் மைனிங் நிறுவனம், நிலத்தடியிலேயே யுரேனியத்தைக் கரைத்துப் பிரித்தெடுக்கும் முறையைப் பயன்படுத்தி வருகிறது.
வழக்கமான சுரங்கங்களில் காணப்படும் பிரம்மாண்டமான பள்ளங்கள், சுரங்கப் பாதைகள், தாதுக்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் இங்கு பெருமளவில் காணப்படுவதில்லை. புல்வெளிகளில் அமைக்கப்பட்டுள்ள துளைக்கிணறுகளே உற்பத்தியின் முக்கியக் கட்டமைப்புகளாக உள்ளன.


முதலில் ஆழ்துளையிட்டு பாறை மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றிலுள்ள யுரேனியத்தின் அளவு, பொருளாதார ரீதியாகப் பிரித்தெடுக்க ஏற்றதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. தாதுப்படிவங்கள் சீராகப் பரவியிருக்காததால், அவற்றின் இருப்பிடத்தையும் ஆழத்தையும் துல்லியமாகக் கண்டறிவது சவாலாக உள்ளது.


ஆய்வில் உறுதிசெய்யப்பட்ட பகுதிகளில், ஒரு வகைக் கிணறு வழியாகத் தாதுப்படிவத்துக்குள் கரைசல் செலுத்தப்படுகிறது. அது யுரேனியத்தைக் கரைத்ததும், மற்றொரு கிணறு வழியாக யுரேனியம் கலந்த திரவம் மேலே கொண்டுவரப்படுகிறது. பின்னர் ஆலையில் சுத்திகரிக்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் 735-வது ஆலையில், மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமான நடுநிலை நிலத்தடிக் கரைப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. 

இதில் கார்பன் டை ஆக்சைடும் ஆக்சிஜனும் பயன்படுகின்றன. இலி படுகையின் சில பகுதிகளில் கார்பனேட் அதிகமுள்ள தாதுப்படிவங்கள் இருப்பது இம்முறைக்கு ஏற்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிலத்தடி நீரின் ஓட்டத்துக்கு ஏற்ப கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒவ்வொரு கிணற்றின் செயல்பாடும் உடனுக்குடன் கண்காணிக்கப்படுகிறது. கிடைக்கும் தரவுகளுக்கு ஏற்ப கரைப்புப் பொருட்களின் விகிதம் தானாக மாற்றப்படுகிறது.


திட்டம் தொடங்கியபோது குடிநீர் மாசுபாடு, புல்வெளிப் பாதிப்பு குறித்து உள்ளூர் மக்களிடம் அச்சம் இருந்துள்ளது. தற்போது உள்ளூர் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கு பணிபுரியும் 23 வயது இளைஞர் ஒருவர், மாதம் சுமார் 8,000 யுவான் சம்பளம் பெறுவதாகக் கூறியுள்ளார். அவரது ஆறு பேர் கொண்ட குடும்பத்தின் முக்கிய வருவாயாக இது உள்ளது. துளையிடப்பட்ட இடங்களில் மீண்டும் புல் வளர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என நிறுவனம் கூறுகிறது. உற்பத்தியுடன் உள்ளூர் வேலைவாய்ப்பு, வரி வருவாய் ஆகியவற்றையும் இணைப்பதே திட்டத்தின் அணுகுமுறையாக உள்ளது.

முந்தைய செய்தி
3 புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்கிறது TARIL
அடுத்த செய்தி
நாளுக்குநாள் நலிவடையும் சுங்குடி சேலை உற்பத்தி! நெசவாளர்கள் வேதனை

தொடர்புடைய செய்திகள்