Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரும்: ஆய்வாளர் ஹேமங் கோர்

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரும்: ஆய்வாளர் ஹேமங் கோர்

அமெரிக்க தேர்தல் குறித்த எதிர்பார்ப்பும், சந்தையின் பதற்றத்துக்குக் காரணமாக உள்ளதாக ஹேமங் கோர் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க தேர்தல், மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவற்றால் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் நீடிக்கும் என ஆக்சிஸ் டைரக்ட் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஹேமங் கோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

அக்டோபரில் முக்கிய பங்குச்சந்தைக் குறியீடுகள் சுமார் 4 சதவீதம் சரிந்துள்ளன. சந்தையில் ஏற்படும் மீட்சிகள் ஓரிரு நாள்களிலேயே வலுவிழக்கின்றன. நிஃப்டிக்கு 23,000 புள்ளிகள் எதிர்ப்பாகவும், 22,300 முதல் 22,000 புள்ளிகள் ஆதரவாகவும் உள்ளன.

அமெரிக்க தேர்தல் குறித்த எதிர்பார்ப்பும், சந்தையின் பதற்றத்துக்குக் காரணமாக உள்ளது. இந்தியா விக்ஸ் குறியீடு சுமார் 18 அளவில் இருக்கிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஜப்பான் மத்திய வங்கியின் கொள்கை அறிவிப்புகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் நிலைப்பாடு தொடர்ந்து எதிர்மறையாகவே உள்ளது.

சரிவு அபாயத்தைக் கட்டுப்படுத்த ‘புட் ஸ்பிரெட்’ உத்தியைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒப்பந்தக் கட்டமைப்பில் அதிகபட்ச இழப்பு சுமார் ரூ.6,200 ஆகவும், லாப வாய்ப்பு ரூ.13,000 வரையிலும் இருக்கும். ஆட்டோ, மருந்துத் துறைகள் ஒப்பீட்டளவில் உறுதியுடன் உள்ளன.

தனியார் வங்கிப் பங்குகளில் எச்சரிக்கை தேவை. பேங்க் நிஃப்டிக்கு 53,000 புள்ளிகள் வலுவான ஆதரவாகவும், 56,000 முதல் 56,500 புள்ளிகள் முக்கிய எதிர்ப்பாகவும் இருக்கும் என்றார்.

முந்தைய செய்தி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி Q2 லாபம் 42% உயர்வு
அடுத்த செய்தி
நோக்கியாவுடன் எல்அண்ட்டி 5 ஆண்டு ஒப்பந்தம்

தொடர்புடைய செய்திகள்