Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நோக்கியாவுடன் எல்அண்ட்டி 5 ஆண்டு ஒப்பந்தம்

நோக்கியாவுடன் எல்அண்ட்டி 5 ஆண்டு ஒப்பந்தம்

உலகளாவிய தொழில்நுட்ப மையத்துக்கு ஆதரவளிக்க இந்தியாவில் தனிப் பொறியியல் குழுவும் அமைக்கப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

நோக்கியா நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆதரவளிக்க, எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம் 5 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் நோக்கியாவுக்காகப் பிரத்யேக மேம்பாட்டு மையத்தை எல் அண்ட் டி நிறுவனம் அமைக்கவுள்ளது. இந்த மையத்தில் மென்பொருள் உருவாக்கம், தயாரிப்பு வடிவமைப்பு, தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நோக்கியாவின் உலகளாவிய தொழில்நுட்ப மையத்துக்கு ஆதரவளிக்க இந்தியாவில் தனிப் பொறியியல் குழுவும் அமைக்கப்படும்.


இந்தக் குழு 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகள், தானியங்கி தொழில்நுட்பம், ஏஐ உள்கட்டமைப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடும். இந்த முயற்சி, எல் அண்ட் டி நிறுவனத்தின் ‘லட்சியா 31’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


இதுகுறித்து நோக்கியாவின் பொறியியல் பிரிவு மூத்த துணைத் தலைவர் விவேக் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியா தங்களது முக்கிய ஆராய்ச்சி மையமாக இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்தவும் உதவும் என்றார்.

 
எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் செயல் இயக்குநர் அலிந்த் சக்சேனா கூறும்போது, "இந்த ஒப்பந்தம் எதிர்காலத் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும்" என்றார்.

முந்தைய செய்தி
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரும்: ஆய்வாளர் ஹேமங் கோர்
அடுத்த செய்தி
பெல்ஜியம் செல்லும் ‘ரன் ரன்’ பாண்டா

தொடர்புடைய செய்திகள்