Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐரோப்பிய ஆற்றல் துறையில் தடம் பதிக்கும் அதானி குழுமம்

ஐரோப்பிய ஆற்றல் துறையில் தடம் பதிக்கும் அதானி குழுமம்

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கௌதம் அதானியின் 'அதானி குழுமம்', ஐரோப்பிய நாட்டின் ஆற்றல் மற்றும் எரிபொருள் சேமிப்புத் துறையில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் விடிடிஐ என்ற பிரபல சர்வதேச ஆற்றல் மற்றும் ரசாயன சேமிப்பு நிறுவனத்தைக் கைப்பற்ற அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தற்போது உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டு வரும் சூழலில், எரிபொருள்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் இத்தகைய முனையங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது.


தற்போது விடிடிஐ நிறுவனத்தில் ஆஸ்திரேலியாவின் ஐஎஃப்எம், விட்டால் ஆகிய நிறுவனங்கள் தலா 45 சதவீத பங்குகளையும், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ஏடிஎன்ஓசி) 10 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. இதில் அபுதாபி நிறுவனம் தனது பங்குகளை முழுமையாக விற்க முடிவு செய்துள்ளதுடன், மற்ற இரு நிறுவனங்களும் தங்கள் பங்குகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க அதானி குழுமத்துடன் சேர்ந்து பல சர்வதேச நிறுவனங்களும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.
ஏற்கெனவே துறைமுகங்கள், விமான நிலையங்கள், தரவு மையங்கள், சுரங்கம், பாதுகாப்பு மற்றும் மின்சாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமத்துக்கு, இந்த ஒப்பந்தம் கைக்கூடினால் ஐரோப்பிய பிராந்தியத்தில் அதன் வர்த்தக எல்லை பெருமளவில் விரிவடையும்.


அண்மையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் முதலீட்டாளர்கள் வாயிலாக ரூ.15,000 கோடி நிதி திரட்டியது. மேலும், அமெரிக்க நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கௌதம் அதானி தனது உலகளாவிய வர்த்தக விரிவாக்கத்தை அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளார். எனினும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்திலேயே உள்ளதால், இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

முந்தைய செய்தி
இடிஎஃப் வருமானத்தில் எல்ஐசி-க்கு முதலிடம்
அடுத்த செய்தி
கப்பல் போக்குவரத்து திறனை அதிகரிப்பது அவசியம்: ஐஓசி தலைவர்

தொடர்புடைய செய்திகள்